தனுஷுடன் நடிக்க போகின்றாரா கௌதமியின் மகள்?

gowthami
நடிகை கௌதமி மற்றும் மகள் சுப்புலக்ஷ்மி

கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் தொடர்ந்து ஒரு செய்தியை பரப்பி வந்தனர் அது என்ன செய்தி என்றால் நடிகை கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி -2 படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கவுள்ளார் என செய்தி வந்தது.

இந்த செய்தியை பார்த்த கௌதமி உடனடியாக தனது டுவிட்டரில் இது தொடர்பாக தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார் டுவிட்டரில் கௌதமி கூறியதாவது :-

எல்லோரும் என்னுடைய குழந்தைக்கு வாழ்த்து சொல்ல முயற்சித்து வருகின்றீர்கள் அதற்கு அனைவருக்கும் நன்றி, அவள் இப்போது தனது கல்வியில் கவனம் செலுத்தி வருகின்றாள் இதனால் நடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. என தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்ட டுவிட் உங்களுக்காக :-