கவுதமி உருவ படம் எரிப்பு.. செருப்படி

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுதமியின் உருவ படத்தை அ.தி.மு.க.வினர் எரித்தனர்.

ஜெயலலிதாவின். மரணம் குறித்து, சில கேள்விகளை கவுதமி எழுப்பியிருந்தார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருச்சியில் அ.தி.மு.கவினர் சிலர், “ஜெயலலிதா மரணம் குறித்து வீண் சந்தேகத்தை கிளப்பி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திகிறார் கவுதமி” என்று தெரிவித்து, அவரது உருவ படத்தை எரித்தனர். மேலும் அந்த படத்தை செருப்பால் அடித்தனர்.

இந்த சம்பவம் திருச்சியில் சிறிது நேரத்துக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

You may have missed