மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை:

ழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்களை தொடர்புகொள்ளும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு  அரசாணை பிறப்பித்து உள்ளது.

கடல் எல்லை மற்றும் இயற்கை பேரிடர்கள், புயல் போன்ற பாதிப்புகளில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அவர்களுக்கு தகவல் அளிக்கும் வகையில், மீனவர்களுக்கு  ஜிபிஎஸ் கருவி வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இன்று அதற்கான அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து 21 யூனிட் சேட்டிலைட் போன்கள் வாங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே தமிழக  மீனவர்கள் கடல் எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பகுதிக்குள் செல் வதை தடுக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம்,  “மீனவர்கள் தங்கள் கடல் எல்லையை அறிந்துகொண்டு மீன்பிடிக்க உதவும் புவிநிலைக்காட்டி (GPS) கருவிகளை அவர்களுக்கு வழங்கும் யோசனை ஏன் மத்திய அரசுக்கு எழவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஜிபிஎஸ் கருவி வாங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.