மதுரை,

துரை அருகே நடைபெற்ற கிராணைட் முறைகேடுகளில், மு.க.அழகிரியின் மகன் தயாநிதி மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரைதயாநிதி உள்ளிட்ட பலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்ய கோர்ட்டு உத்தரவின் பேரில்  சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில்  கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, மு.க.அழகிரியின் மகன் உள்பட 15 பேர் மீது   குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர அதிக அளவில்  கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது காரணமாக,   அரசுக்கு 257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 5191 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.