சென்னை: குடியரசு தினத்தன்று வழக்கமாக நடத்தப்படும் கிராம சபை கூட்டம், நாளை நடத்தக்கூடாது  என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளையும், சீரான நிர்வாகத்தினையும் மேம்படுத்தும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமானது.  அதன்படி, வருடத்திற்கு 4 நாட்கள், அதாவது  குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு குடியரசு தினத்தை தவிர்த்து வேறு எந்த தினத்திலும் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலை யில்,   நாளை (26ந்தேதி) நடைபெறும்   கிராம சபை கூட்டமும் நடத்தக்ககூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில்,  கொரோனா அச்சறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.