கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் பிரச்சாரம் – பரபரப்பில் உத்திரப்பிரசேம்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் – ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் இணைந்து, சஹரான்பூர் தியோபந்த் நகரத்தில் கூட்டுப் பேரணியை நடத்துகின்றன.

இந்தப் பேரணியில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள் தலைவர் அஜித் சிங் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நாட்களில், இந்த 3 தலைவர்களும் பலமுறை ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வர் எனவும் கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடவுள்ளன.

இம்மாநிலத்திலுள்ள மொத்தம் 80 தொகுதிகளுக்கு, 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.