அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ், நடால், டெல் போட்ரோ காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர். இவர் அடுத்த போட்டியில் கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோத உள்ளார்.

williams_nadal

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எஸ்தோனியாவை சேர்ந்த கையா கனேபியை எதிர்கொண்டார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த செரீனா 6-0, 4-6, 6-3 என்ற கணக்கில் எஸ்தோனியா வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதையடுத்து அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து அடுத்த சுற்றில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொள்ள உள்ளார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால், ஜியார்ஜியா வீரர் நிக்கோலோசை எதிர்கொண்டார். முதல் 2 செட்களை வென்ற நடால் 3வது செட்டில் கோட்டை விட்டார். அடுத்து தொடங்கிய 4வது செட்டில் நடால் விட்டுக்கொடுக்காமல் விளையாடி 3-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதே போன்று முன்னாள் சாம்ப்பியனான ஜான் மார்ட்டின் டெல் போட்ரோ தன்னை எதிர்கொண்ட குரோஷியா வீரர் போர்னா கோரிக்-ஐ 6-4, 6-3, 6-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.