தாத்தாவுக்குக் குழி தோண்டிய பேரன்..   பக்கத்திலேயே புதைக்கப்பட்ட பரிதாபம்..

தாத்தாவுக்குக் குழி தோண்டிய பேரன்..   பக்கத்திலேயே புதைக்கப்பட்ட பரிதாபம்..

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஜனசாத் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவரான முகமது யூசுப், வயோதிகம் காரணமாக இறந்து போனார்.

அங்குள்ள மயானத்தில் யூசுப்பின் பேரன் சலீம் தன், நண்பர்களுடன்   சேர்ந்து  தாத்தாவைப் புதைக்கக் குழி தோண்டிக்கொண்டிருந்தார்.

அப்போது சலீமுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

மயங்கிச் சரிந்தார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சலீமை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

போகும் வழியிலேயே, அவர் உயிர் போய் விட்டது.

தாத்தா சடலத்தைப் புதைத்த இடத்தின் பக்கத்தில் மற்றொரு குழி தோண்டி, சலீமைப் புதைத்துள்ளனர்.

தனது ,மரணம். சலீமுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததாக அவரது நண்பர்கள் கண்ணீர் மல்கக் கூறினர்.

மயங்கிச் சரியும் முன்பாக சலீம், தன் நண்பர்களிடம்,’’ இன்னும் யாரோ ஒருவர் சற்று நேரத்தில்  இறக்கப் போகிறார் என்று என் உள் மனம் சொல்கிறது, எனவே இந்த குழிக்குப் பக்கத்தில் இன்னொரு குழியும் தோண்டி தயாராக வைத்திருங்கள்’’ என்று சொல்லி விட்டு மூர்ச்சை அடைந்துள்ளார்.

–  ஏழுமலை வெங்கடேசன்