அயோத்யாவில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை : யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

க்னோ

யோத்தி நகர் சரயு நதிக்கரையில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை நிறுவப்படும் என உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச கவர்னர் மாளிகையில் நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது.  அந்த சந்திப்பில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் வரும் அக்டோபர் 18 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு, நடைபெறும் விழாவைப் பற்றி அறிவிக்கப்பட்டது.   அந்த விழாவில் உ பி ஆளுநர் நாயக், முதல்வர் யோகி அமர்நாத், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே ஜே அல்ஃபோன்ஸ் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள் என தெரிவிக்கைப்பட்டது.  இந்த விழாவில் தீப உத்சவம் எனப்படும் 1.71 லட்சம் தீபம் ஏற்றும் விழா, நகரினுள் புனித ஊர்வலம் மற்றும் ராமருக்கு ராஜ்யாபிஷேக விழா ஆகியவை நடை பெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் விரைவில் அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் ராமருக்கு ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்றை நிறுவ முதல்வர் விருப்பம் தெரிவித்து கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும்,  அந்தக் கடிதம் தேசிய பசுமை தீர்ப்பாணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   பசுமைத் தீர்ப்பாணையம் அனுமதி அளித்ததும் சிலை நிறுவும் பணி தொடங்கப்படும் என தெரிகிறது.

இது பற்றி நடத்தப்பட்ட புகைப்பட வீடியோ காட்சியில் இந்த சிலையின் உயரம் சுமார் 100 மீட்டர் என நிச்சயித்துள்ளதாகவும் ஆனால் அது மாறுதலுக்குட்பட்டது எனவும் சொல்லப்பட்டது.   இந்த சிலை அமைப்பு, மாநில புனித சுற்றுலா திட்டத்தின் கீழ் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது.