மதுரை: கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமியை விடுதலை செய்து மேலூர் நீதி மன்றம் அளித்த உத்தரவை மதுரை உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துஉத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மேலூர் அருகே உள்ள அரசுக்கு சொந்த மான இடங்களையும், இயற்கை வளங்கனான  பெரும் மலைகளை அறுத்தும் கிரானைட் வியாபாரம் செய்து வந்தவர் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனர்  பி.ஆர்.பழனிசாமி.

சட்டவிரோதமாக ஏராளமான ஏக்கரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்த தால், தமிழக அரசுக்கு 1 லட்ரூசத்து.16 ஆயிரம்  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று  கடந்த 20‌15-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்‌தில் ஐஏஎஸ் அ‌‌திகாரி சகாயம் தலைமையிலான குழு தனது அறி‌க்கையை தாக்கல் செய்தது.

இது தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளை கிரானைட் குவாரிகளை மூட அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்  மேலூர் கோர்ட்டு விசாரித்து வந்தது. அதில்,  அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து, கிரானைட் வெட்டிஎடுத்து முறை கேடு செய்யப்பட்ட வழக்கில்  பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலூர், கீழவளவு பகுதிகளில் அரசு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1089.17 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது ஏற்கனவே  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு மதுரை அருகே உள்ள மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில்,  கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி மற்றும்  அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.