டில்லி:

த்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து நீங்களும் கருத்து சொல்லலாம் என பொதுமக்கள், நிதி ஆலோசகர்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடி தலைமையில் புதிய மத்தியஅமைச்சரவை கடந்த 30ந்தேதி (மே மாதம்) பதவி ஏற்ற நிலையில், வரும் ஜூன் 17ந்தேதி 17வது பாராளுமன்றத்தின் முதல்  கூட்டம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 5ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் முதன்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு அடைந்து உள்ளது. இதற்காக அவர் மும்முரமாக பணியாற்றி வருகிறறார். இந்த பட்ஜெட்டில்,  பொருளாதார மந்த நிலை, வேலையில்லா பிரச்னையை தீதீர்க்க முன்னுரிமை  மற்றும் வரி சேமிப்பு, வருவாய் அதிகரிப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குமாறு பொதுமக்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   பொருளாதாரத்தை வலுவாக்க தொழில்துறையை மேலும் வளர்ச்சி பெற தேவையான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று தொழில்துறையில் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காண வேளாண்மை துறையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.