அமோக வெற்றி: நாளை 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில்  டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்கிறார்.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி, மீண்டும் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றுள்ளனது. இதன் காரணமாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கான முதல்வர் 51, 514 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றுள்ளார்.

199 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில் 88  தொகுதிகளில் தெலுங்கான ராஸ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி முன்னிலை  பெற்று வருகிறது.

இதில், 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் ஆட்சி அமைப்பது 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தெலுங்குதேசம் கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்றும் 7 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.  பாஜக மற்றும் இதர கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் கடந்த 7 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  73.20% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று  தேர்தலுக்கு பிந்தயை கருத்துகணிப்புகளில்  தெரிவித்திருந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை அதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் 2வது முறையாக நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.