நெட்டிசன்:
பச்சைக்கிளியும் வெட்டுக்கிளியும் – நெல்லை வசந்தன்!
பச்சைக்கிளிக்கு அதன் நிறமே காரணப்பெயர் ஆகி விடுகிறது. பச்சை நிறமானது புதனை குறிக்கும். இதற்கு நிறைவாகு என்று பெயர். புதன் என்பது ஜோதிடத்திற்கு காரணகர்த்தா. ஆகவே, சோதிடம் சொல்வதற்கு கிளி உபயோகப்படுகிறது.  புதனுக்குரிய ஸ்தலம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். மதுரை மீனாட்சி அம்மன் கையிலும் கிளி உள்ளது.
பிள்ளைகளில் சுட்டி பிள்ளைகளும் உண்டு. அழகு குறைந்த பிள்ளைகளும் உண்டு. சேட்டை நிறைந்த பிள்ளைகளும் உண்டு. அந்த வகையில் தான் வெட்டுக்கிளி வருகிறது. புதனுக்கு கிளி என்று குறிப்பிட்டோம். வெட்டு என்பதற்கு செவ்வாய்-சனி சேர்க்கை. வெட்டுக்கிளி என்றால், புதன்- செவ்வாய்-சனி மூன்று கிரக சேர்க்கை ஆகும்.
இந்த வெட்டுக்கிளி பச்சை பசேலென்ற செடிகளையும் பயிர்களையும் வெட்டி நாசம் செய்கிறது. இதற்கு, புதனுக்குரிய வெற்றிலை – செவ்வாய்க்குரிய மிளகு – சனிக்குறைய வேப்ப இலை இந்தமூன்றையும் காய வைத்து பொடியாக்கி வயல்வரப்புகளில் அங்குமிங்குமாய் தூவினாலும் அல்லது புகை போட்டாலும் வெட்டுக்கிளியை தடுக்கலாம். இது ஒரு சோதிட அனுமானம்.‘
இந்த செய்தியை நேற்று (29 /5/2020) கூறி இருந்தேன். ஆனால் இன்று (30/5/2020) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பன்ன ஹள்ளி ஏரியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு என்று தொலைக்காட்சியில் செய்தி வந்துள்ளது. ஏற்கனவே கூறியது போலவெட்டுக்கிளிக்கு புதன் செவ்வாய். சனி தொடர்பாகும். புதன் என்றால் பச்சை ….என்றால பச்சைமேனி வண்ணன்…. மாலன், கிருஷ்ணன் என்பதாகும்,
செவ்வாய் என்றால் மலை, கிரி. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பன்னஹள்ளி என்ற பகுதியை நோக்கி படையெடுப்பு. இதில் வேப்பன்ன என்பது சனிகிரகத்தைகுறிக்கும். ஆக கிரகங்கள், தங்களுடைய காரகத்துவங்களை பல பரிமாணங்களில் நடத்திகாட்டும். அரசு வேளாண்மை அதிகாரி, வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து, வயல் வெளியில தெளிக்குமாறு அறிவுறுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது.