ஹாங்காங்

ஹாங்காங் உருவாக்க உள்ள செயற்கை தீவுகள் திடத்துக்கு பசுமை இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

உலகில் அதிக ஜனத்தொகை உள்ள நகரங்களில் ஹாங்காங் நகரமும் ஒன்றாகும். இந்த இடத்தில் எவ்வித புதிய கட்டுமானப் பணிக்கும் இடமில்லாத நிலை உள்ளது. அத்துடன் அரசு குடியிருப்புக்கள் மிகவும் குறைவாகவும் தனியார் வாடகைக் குடியிருப்புக்கள் ஏராளமாகவும் உள்ளன. எனவே ஹாங்காங் அரசு இந்த இடப் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தது.

அதன் ஒரு பகுதியாக மிக அதிக பரப்பளவில் செயற்கை தீவுகள் அமைக்க ஹாங்காங் திட்டமிட்டது. இது குறித்து ஹாங்காங் மேம்பாட்டு கழகத்தின் செயலர் மைக்கேல் வாங் இந்த தீவு அமைப்பது குறித்தும் அதற்கான செலவுகள் குறித்தும் அறிக்கை வெளியிட்டார். அத்துடன் தற்போதுள்ள அரசு குடியிருப்புக்கள் அமைக்க நிலப் பற்றாக்குறை உள்ளதால் இந்த திட்டம் அவசியம் தேவை எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை வடிவமைக்க ஹாங்காங் அருகே உள்ள லடாவ் தீவு விரிவாக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் இதுவே மிகப் பெரிய தீவு ஆகும். அத்துடன் நகரின் விமான நிலையமும் இங்கு தான் அமைந்துள்ளது. இங்குள்ள 1000 ஹெக்டேர் நிலத்தை நிலத்தை பயன்படுத்தி சுமார் 2.5 லட்சம் அரசு குடியிருப்புக்கள் கட்ட உள்ளதாக மைக்கேல் தெரிவித்தார்.

லடாவ் தீவுக்கு அருகில் உள்ள துபாயின் பாம் ஜுமெரியா தீவும் இது போல் விரிவாக்க்கம் செய்து உருவாக்கப்பட்டதாகும். அதற்கு 950 ஹெக்டேர் நிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுளது.  எனவே இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் ஹாங்காங் பசுமைஅமைப்புக்களான கிரீன்பீஸ் ஹாங்காங் உள்ளிட்ட பல அமைபுக்கள் இந்த செயற்கை தீவுகள் அமைப்பதை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

குறிப்பாக பசுமை ஹாங்காங் அமைப்பு இந்த தீவுகள் அமைப்பதினால் உலகில் கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புளதாகவும் அதனால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிப்படையும் எனவும் தெரிவித்துளது. அது மட்டுமின்றி புதிய தீவுகளில் கடல் சீற்றத்தினால் பாதிப்புக்கள் அதிகம் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு மைக்கேல் வாங், “புதிய தீவுகள் நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட உள்ளன. எனவே உயரும் கடல் மட்ட நீர் அந்த தீவுகளை சுற்றியே இருக்கும். மேலும் புதிய தீவு கடல் மட்டத்துக்கு 19 அடி மேலே அமைய உளதால் கடல் சீற்றத்தினால் எவ்வித பாதிப்பும் இருக்காது.: என பதில் அளித்துள்ளார்.