லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: புகைப்படங்கள் வெளியீடு!

லண்டன்,

டந்த வாரம் நடைபெற்ற லண்டன் அடுக்கு மாடி குடியிருப்பின், தற்போதைய புகைப்படங்களை லண்டன் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

சமீபத்தில் லண்டல் உள்ள 27 மாடி குடியிருப்பான   கிரென்ஃபெல் டவரில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.  27 மாடிகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பில் 125 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

தீ டவரின் அனைத்து தளங்களிலும்  பரவி எரிந்ததில் இதுவரை 60 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்டிடத்தின் எரிந்து கருகிய பல்வேறு பகுதிகளை போலீசார் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.