நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியாவில் ஒத்தி வைக்க வேண்டும்: கிரெட்டா தன்பெர்க் வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை இந்தியாவில் ஒத்தி வைக்க துணை நிற்பதாக சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் சிறுமி கிரெட்டா தன்பெர்க். ஐநாவில் உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை அவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் சிறுமி கிரெட்டா தன்பெர்க், இந்தியாவில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனா சூழலில், இந்திய மாணவர்கள் தேசிய தேர்வுகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவது நியாயமற்றது. மில்லியன் கணக்கான மக்கள் வெள்ளம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்கிறேன் என்று கூறி உள்ளார்.