குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் அமைக்கப்படும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து குறைதீர்ப்பு மேலாண் திட்டம் மற்றும் உதவி மையத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழக சட்டபேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது.  காலையிலேயே  கேள்விநேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது முதல் சபை நடவடிக்கைகள் காரசாரமாக நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து,   110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டார்.

அதன்படி, அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் அமைக்க ரூ.12.78 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.