லண்டன்.

லக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் பட்டம் வென்றார.

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் உலகின் சிறந்த வீரர்கள் பங்கு பெற்றனர். 8 இடங்களில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்கேரிய வீரர் சாம்பியன்ஷிப் போட்டியை கைப்பற்றினார்.

நேற்று நடைபெற்ற இறுதிபோட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான டேவிட் கோபினை எதிர்த்து டிமிட்ரோவ் ஆடினார்.

முதல்சுற்றில் அபாரமாக அடி   7-5 என கணக்கில் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது சுற்றை   4-6 என டேபிட் கோபின் கைப்பற்றினார்.

அதைத்தொடர்ந்து இறுதிச்சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் டிமிட்ரோவ் அபாரமாக விளையாடினார். தொடர்ந்து 6-3 என்ற செட் கணக்கில் டேவிட்டை வீழ்த்து சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் தரவரிசையில் 8 பேர் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக கிரிகோர் டிமிட்ரோவ் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.