வியட்னாம்: சாலை விபத்தில் மணமகன் உள்பட 13 பேர் பலி

ஹனோய்:

வியட்னாம் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்தில் நடக்க இருந்த திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.

இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.