மணமேடையில் கொளுந்தியாளுக்கு குறிவைத்த மாப்பிள்ளை..

ன்சானி

திருமணத்தன்று ஒரு மணமகன், மணப்பெண்ணின் தங்கைக்குக் குறி வைத்துள்ளார்

உ.பி.மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தன்சானி என்ற கிராமத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு திருமணவிழா.

திரளான கூட்டம்.

தாலி கட்டும் நேரம்.

மணமகனான ரிஸ்வான், அப்போதுதான், மணப்பெண்ணின் தங்கையைப் பார்க்கிறான். உடனே மணப்பெண்ணுக்குத் தாலி கட்ட மறுக்கிறான். மேலும்

‘இவள் தான் எனக்குப் பொருத்தமானவள். இவளைத்தான் கட்டுவேன்’ என கொழுந்தியாளை கை காட்டினான்.

திருமண அரங்கம் ஸ்தம்பித்துப் போனது.

ரிஸ்வானுக்கு, உறவினர்கள் புத்தி சொன்னார்கள். அவன் கேட்பதாக இல்லை.

அப்புறம்?

பெண் வீட்டார், மாப்பிள்ளையைத் துவைத்து எடுத்து விட்டனர்.

அவனை முட்டிபோட வைத்தனர்.

இந்த கூத்துக்களை எல்லாம் வீடியோவாக எடுத்து, வலைத்தளங்களில் பரவ விட்டனர், பெண் வீட்டு ஆட்கள்.

கொரோனா பீதியால்.திரையரங்குகள் எல்லாம் மூடிக்கிடக்க-

இப்போது ரிஸ்வான் வெளுத்து வாங்கப்படும், ஆக்ஷன் வீடியோ தான்,அந்த மாநில மக்களின் ஒரே பொழுதுபோக்கு.

– ஏழுமலை வெங்கடேசன்