த்தரகாண்ட

ரு மணமகன் திருமணமான அன்று இரவை காவல் நிலையத்தில் கழித்துள்ளார்

திருமணமான அன்றே புது மாப்பிள்ளை ஒருவர் காவல் நிலையத்தில், தனது இரவை கழிக்க நேரிட்டது.

எல்லாம் கொரொனாவின் கைங்கரியம் தான்.

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள கதிமா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள 8 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால் அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள உத்தம்சிங் நகரில் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நடந்துள்ளது.

போலீசிடம் அனுமதி பெறாமல் கல்யாண ஊர்வலமும் நடக்க-

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

போலீசைக் கண்டதும் ஊர்வலத்தினர் பலர், தப்பி ஓடிவிட மணமகன் சலீம் மற்றும் 7 பேர் மட்டும் பிடிபட்டனர்.

8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களைக் காவல் நிலையம் கொண்டு வந்து விடிய விடிய வைத்து விசாரணை நடத்தினர்.

வழக்குப்பதிவு செய்து காலையில், மணமகன் உள்ளிட்டோரைக் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு விடுவித்தனர்.

– ஏழுமலை வெங்க்டேசன்