ஆறு கிலோ மீட்டம் தூரம் உறைப்பனியில் நடந்து சென்று 25பேருடன் நடைபெற்ற விநோத திருமணம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொட்டும் பனியில் நடைபெற்ற இந்த திருமணம் அப்பகுதியில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

wed

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது மக்கு மாத் என்ற பகுதி. தற்பொழுது பொழிந்து வரும் கடும்பனியினால் இப்பகுதி முழுவதும் உறைபனியால் சூழப்பட்டுள்ளது. உறைபனியால் மூடப்பட்ட சாலைகளில் நடைபெற்ற திருமணம் ஒன்று அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அண்டார்டிகா கண்டத்தில் சென்று திருமணத்தை நடத்திய அனுபவத்தை மணமக்களுக்கு இந்த பனிப்பொழிவு பரிசாக அளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மக்கு மாத்தில் உள்ள மணமகனுக்கும் திரியுகிநாரயன் கிராமத்தில் உள்ள மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கான மணமகன் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே வந்துள்ளார். இதற்கு முன்னதாக மக்கு மாத்தில் நடைபெறும் திருமணத்திற்காக திரியுகிநாரயண் கிராமத்தில் 80 பேர் புறப்பட்டது. ஆனால் கடும் பனி சாலைகளை மூடி இருந்ததால் அனைவரும் பாதியிலேயே நிறுத்தப்பட்டனர்.

திருமண சடங்கிற்கு தேவைப்படும் மாமன் முறை, சகோதரி மற்றும் பெரியவர்கள் மட்டுமே கடுமையான பனிபாதையின் வழியே திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பனி படர்ந்த சாலையில் குழந்தைகள் இடம்பெற்றது சிறப்பு.

அனைவரும் பேசும்விதமாக நடந்த இந்த விநோத திருமணம் குறித்து மணமகனின் சகோதரர் கூறுகையில்,” இதேபோன்ற திருமணம் 2002ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு தற்போது தான் பனி சூழந்த இடத்தில் திருமணம் நடந்துள்ளதை பார்க்கிறோம். இந்த திருமணத்தை அனைவரும் மறக்கமாட்டார்கள். மணமகன் ஒரு ராணுவ வீரர். நாங்கள் வரும்வழி எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை திருமண புகைப்படங்களை பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் “ என கூறினார்.

கடந்த 7 நாட்களாக பனிபொழிவின் காரணமாக அந்த மக்கு பாத் கிராமத்திற்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை என்றும், தங்கள் அன்றாட தேவைக்கு மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அப்பகுதி வாழ் சிலர் தெரிவித்துள்ளனர்.