வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை அடித்த பெண் வீட்டார்..! – லக்னோவில் அதிர்ச்சி

வரதட்சணை அளித்தால் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என கூறிய மணமகனுக்கு, மணமகள் வீட்டார் மொட்டை அடித்த சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது.

grooms

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அப்துல் கலாம். இவர் திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு மணமகள் வீட்டாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க செயின் வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது. வரதட்சணை அளித்தாள் தன் திருமணம் நடக்கும் என மணமகன் கூடியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வரதட்சணை கேட்ட மணமகனை எச்சரிக்கும் வகையில் பெண் வீட்டார் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் அந்த மணமகன் பெண்ணின் உறவினர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இது குறித்து மணப்பெண்ணின் தாய் கூறுகையில், “ மணமகன் திருமணத்திற்கு 5நாட்களுக்கு முன்பு வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க செயின் கேட்டார். எங்களால் அவரின் விருபத்தை நிறைவேற்றா முடியாது என தெரிவித்தோம். இதையடுத்து திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என மணமகன் கூறினார். ஆனால், அவருக்கு யார் மொட்டையடித்தது என்ற விவரம் எங்களுக்கு தெரியாது” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மணமகன் “ முன்னரே வாகனம் வேண்டும் என்று கேட்டு இருந்தோம். திடீரென நாங்கள் எதையும் கேட்கவில்லை “ என கூறினார்.