சென்னை:

டிஎன்பிஎஸ்சி இன்று  குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட 6,491  பணியிடங்களுக்கான குருப்4 தேர்வு செப்டம்பர்1ந்தேதி  நடைபெறும் என்று  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குரூப்-4 , த தேர்வுக்கு தடை விதிக்க கோரி  மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில்,  2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் ஏற்பட்ட காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை டி.என்.பி.எஸ்.சி கருத்தில் கொள்ளவில்லை எனவும், காலியிடத்தில் தனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, . மனு குறித்து வரும் 26-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.