டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை:

மிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு பணிகளுக்கு தேவையான நபர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் குரூப்-4 தேர்வு நடைபெறாத நிலையில், தற்போது, 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப் பங்கள் பெற்றப்பட்டன. தேர்வு செப்டம்பர் 1ந்தேதி  நடைபெற உள்ளது.

காலியாக உள்ள  6491 பணியிடங்களுக்கான  16.3 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்து உள்ளது. தற்போது தேர்வு எழுதுபவர்க ளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை ஹால் டிக்கெட் இல்லை கிடைக்கவில்லை என்றால் தேர்வாளர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதின் நகலை contacttnpc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது. இதில் தேர்ச்சி பெற குறைந்தது 90 மதிப்பெண்களாவது எடுக்க  வேண்டும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம், பொது அறிவு பாடப் பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.