விழுப்புரம்,
ன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை புதுமணப்பெண் எழுதியது அந்த பகுதியில் பரபரப்பானது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு இன்று மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடைபெற்றது. அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட  பணிகளுக்காக இந்த தேர்வு நடைபெற்றது.

இன்று காலை திருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில் குரூப் 4 தேர்வு எழுதினார் புதுப்பெண் ஒருவர். இச்சம்ப வம் விழுப்புரத்தில் பரபரப்பானது.
விழுப்புரம் மாவட்டத்தில் 186 தேர்வு மையங்களில் 72 ஆயிரத்து 943 பேர் தேர்வை எழுதினர். 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதுவரைக்கும்   இல்லாத அ‌ளவிற்கு, இந்த தடவை 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இத்தேர்வை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த சுப்பிரமணியன் என்வரது மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், . தணிக்கலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (எ) பிரதீப்புக்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் மணப்பெண் அகிலாண்டேஸ்வரி குரூப் 4 போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர்.
தேர்வு எழுதிய அகிலாண்டேஸ்வரி பொறியியல் துறையில் பி.இ. (இசிஇ) முடித்தவர்.
தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றுவர வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.