சிறுமியை  பலாத்காரம் செய்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த  சிறுவர் கும்பல்!    

சிகாகோ:

மெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’) நேரடியாக காட்டிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சிகாகோ போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி தெரிவித்தாவது:

“பேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த அதிர்ச்சி நேரலையைக் கண்டவர்களில் நாற்பது பேர், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு புகார் செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும், போலீஸ் அதிகாரி எட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும் ஒப்படைத்தார்.

காவல்துறை விசாரணையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். மற்ற ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட  சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச படம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து அவர்களது குடும்பம் வேறு நகரத்துக்கு குடிபெயர்ந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed