பரோட்::

ட்டலுக்கு வந்த ராணுவ அதிகாரிகள், அங்குள்ள வெயிட்டரிடம் தகராறு செய்ததால், அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் இரு ராணுவ வீரர்களையும் கடுமையாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் உ.பி.மாநிலத்தில் உள்ள பராட் (Baraut) நகரில் நடைபெற்று உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது-

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தன்று ஓட்டல் ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெற்ற சிறு மோதலில், ராணுவ வீரர்கள் தலையிட்டு ஓட்டல் ஊழியரை தாக்கியதால் பிரச்சினை பெரிதாகி உள்ளது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் ஒன்றிணைந்து, இரு ராணுவ வீரர்களையும் தடிகளை  கொண்டு  சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தொடக்கத்தில் ஓட்டலுக்குள் நடைபெற்று வந்த இந்த மோல், பின்னர் சாலை வரை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து பரோட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ரமனந்த் குஷ்வாகா, விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து, ராணுவ வீரர்களை தாக்கிய 7-8  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.