சென்னை:

மிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்1 தேர்வில் 24 கேள்விகள் தவறு என ஒப்புக்கொண்ட டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், அன்று அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,  விடை களில் உள்ள தவறுகளை ஆய்வு செய்த 3 பேர் குழுவின் பரிந்துரை படி 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான  டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது.  தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட பல கேள்விகள் தவறு என்று விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் கடந்த விசாரணையின்போது,   குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக இருந்ததாக  ஒப்புதல் அளித்தார். மேலும்  இது குறித்து விரிவான  விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என முறையிட்டார்.

அதன்படி இன்று டிஎன்பிஎஸ்சி.இன்று  பதில் மனு தாக்கல் செய்தது, அதில், குரூப்1 மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் கொடுக்கப் பட்டிருந்தன. 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளன. 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை. இது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின்படி தவறான கேள்விகளுக்கு தலா 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என்று தெரிவித்து உள்ளது.

மேலும், மாதிரி விடைத்தாளில் 96 கேள்விகளுக்கு தவறான பதில் அளித்துள்ளதாக 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும்,  உச்சநீதிமன்ற உத்தரவின் படி, நிபுணர் குழு அறிக்கையை வெளியிட முடியாது. விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களையும் வெளியிட முடியாது என்றும் தெரிவித்து உள்ளது.  இதையடுத்து வழக்கு ஜூன் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது.