டில்லி,

மோடி அறிவித்த பண மதிப்பிழப்பிற்கு பிறகு, இந்தியாவின் வளர்ச்சி 5 சதவிகிதம் குறைந்துள்ள தாக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதியஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய் தலைமையிலான மத்தியஅரசு பதவி வகித்தபோது, நிதி அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா.

இவர் சமீபத்தில்,  இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பேசினார்.

அப்போது, மோடியின் பணமதிப்பிழப்பு குறித்து கடுமையாக சாடினார்.  இந்த பண மதிப்பிழப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே இருந்த 7 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும்,  தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  5 சதவிகிதமாகவே உள்ளது.

ஏற்கனவே இருந்ததில் இருந்து 2 சதவிகிதம்  குறைந்துள்ளது என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.

இதற்காக 250 வகையான அடிப்படை தன்மைகளை வைத்து பழைய மற்றும் புதிய பார்முலாவை வைத்து கணக்கிடும்போது, 7 சதவிகித பொருளாதார வளர்ச்சி 5 சதவிதிமாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது என்றும்,

இதுகுறித்து, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கவலைகளை எழுப்பியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா.

இதன் காரணமாக அரசு  முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றில் தொடர்ச்சியாக பாதிப்பை சந்தித்துள்ளது என்றும்,  இதுகுறித்து ஏற்கனவே பாராளுமன்ற நிலைக் குழுவினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவர்கள்முன்பு நேரில் ஆஜரான தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேல் விளக்கம் அளித்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

பாரதியஜனதாவின் மூத்த தலைவர் ஒருவரே மோடி அரசு குறித்து குறை கூறியிருப்பது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.