வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17

டில்லி: இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், ஏரியன் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ ) அனுப்பியது. இன்று அதிகாலை 2.29 மணிக்கு விண்ணில் பாய்ந்த ஏரியன் ராக்கெட், ஜிசாட்-17 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள் 3,477 கிலோ எடை கொண்டதாகும். இந்த அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை  அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. ஆகவே தான் பிரெஞ்ச் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஜிசாட்-17 செயற்கைகோளின்  ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் ஆகும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: GSAT-17 launch successfully, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17
-=-