ஜிஎஸ்எல்வி மாக்-3 நாளை விண்ணில் ஏவப்படும்: சிவன்பிள்ளை

திருப்பதி:

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி2 ராக்கெட்  திட்டமிட்டபடி நாளை விண்ணில் ஏவப்படும் என்ற இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை கூறினார்.

நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையொட்டி, இன்று திருப்பதி வந்து ஏழுமலையானை சிவன் பிள்ளை  தரிசனம்  செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் மண்டபத்தில் வேதபண்டிதர்கள் மூலம் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை

சாமி தரிசனம் முடிந்தபின் கோவிலை விட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை, ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டப்படி  நாளை திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்  என்றார்.

இந்தியாவின் பெரிய ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி2 மூலம், ஜி-சாட் 29 செயற்கைக் கோள் நாளை மாலை 5.08 மணிக்கு  திட்டமிட்டபடி ஏவப்படும் என்றார்.

தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக  ராக்கெட் ஏவுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றவர்,  கஜா புயல் ஸ்ரீஹரிகோட்டா நோக்கி   திசைமாறினால் மட்டுமே செயற்கைக்கோள் ஏவுவது தாமதமகலாம் என்றும் கூறினார்.
தற்போது கடலூர் பாம்பன்  இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி மாக்3 ராக்கெட் விண்ணில் பறக்கும் என்று இஸ்ரோ உறுதி கூறி உள்ளது.

இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் வருகின்ற 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி  நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது .

அதன்படி  ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் விண்ணிற்கு சுமந்து செல்ல உள்ளது. நவம்பர் 14ம் தேதி, மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்றும், அத்துடன்  3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மாக்-3 எடுத்துச் செல்ல இருப்பதாகவும் கூறி உள்ளது.

இந்த ராக்கெட் இந்திய விண்வெளி மையதான சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

கார்ட்டூன் கேலரி