திட்டமிட்டபடி வரும் 14ந்தேதி ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் பாயும்! இஸ்ரோ

ந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டப்படி  வருகின்ற 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ கூறி உள்ளது.

தற்போது கடலூர் ஸ்ரீஹரிகோட்டா இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி மாக்3 ராக்கெட் விண்ணில் பறக்கும் என்று இஸ்ரோ உறுதி கூறி உள்ளது.

இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் வருகின்ற 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அன்று மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது .

அதன்படி  ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் விண்ணிற்கு சுமந்து செல்ல உள்ளது. நவம்பர் 14ம் தேதி, மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்றும், அத்துடன்  3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மாக்-3 எடுத்துச் செல்ல இருப்பதாகவும் கூறி உள்ளது. இந்த ராக்கெட் இந்திய விண்வெளி மையதான சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

இதற்கிடையில் தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள  கஜா புயல் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியானது.

ஆனால், இது தவறான தகவல் என்று றுத்துள்ள இஸ்ரோ, திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.