ஸ்ரீஹரிகோட்டா :

இந்திய விண்வெளி வரலாற்றில் மிக அதிகளவு எடை உடைய செயற்கைக்கோளை விண்ணில் ஏவி, இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

தொழில்நுட்ப சேவைகளுக்காக இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு துவங்கியது.
இன்று (5ஆம் தேதி) மாலை 5.28 மணிக்கு இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் சென்றது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்த முடியும். அதோடு விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்பவும் முடியும்.

இந்த ராக்கெட் முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.