ஜிஎஸ்டி விளம்பர செலவு ரூ.132 கோடி…..மத்திய அரசு

டில்லி:

ஜிஎஸ்டி விளம்பரத்துக்கு ரூ.132 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பலவிதமாக விளம்பரம் செய்தது.

இந்த விளம்பரத்துக்காக மட்டும் ரூ.132.38 கோடி செலவு செய்துள்ளது. இந்த விபரம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பத்திரிகைகளில் செய்த விளம்பரம் மூலம் ரூ.126.93 கோடியும், ஊடகங்கள் மூலம் 5.44 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.