சட்டப்பேரவையில் இன்று ஜி.எஸ்டி மசோதா தாக்கல்!

சென்னை,

ற்போது பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.

கூவத்தூர் முகாமில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணை, மாட்டுக்கறிக்காக விற்பனை தடை உத்தரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற விசயங்களை எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்த தயாராக இருக்கிறது.

இந்த நிலையில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, இன்று ஜி.எஸ்.டி.க்கு அனுமதி அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed