நான்காம் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வருவாய்

டில்லி

சென்ற மாத ஜி எஸ் டி வருவாய் ரூ 1.05 லட்சம் கோடி ஆனதால் நான்காம் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

கடந்த சில மாதங்களாக மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு அளிக்காமல் உள்ளது.  இதற்கு ஜிஎஸ்டி வருமானம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது.  கடந்த 4 மாதங்களில் ஜிஎஸ்டி வருமானம் எதிர்பார்த்ததை விட ரூ.1.35 லட்சம் கோடி குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்ற மாதம் இறக்குமதி 3% குறைந்துள்ளது.  இதனால் ஜிஎஸ்டி வருமானம் 12% அதிகரித்துள்ளது.   சென்ற மாதம் ஜிஎஸ்டி வருமானம் ரூ.1.05 லட்சம் கோடி ஆகி உள்ளது.  இது சென்ற வருடம் இதே மாதத்தை விட 8.3% அதிகமாகும்.  அதே வேளையில் இந்த வருடம் ஜனவரி மாத வருவாயை விட குறைவான தொகை ஆகும்.

ஜிஎஸ்டி வருமானம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.91,916 கோடி மற்றும் அக்டோபர் மாதம் ரூ.95,380 கோடியாக இருந்தது ஆனால் நவம்பரில் ரூ.1.04 கோடி, டிசம்பரில் 1.03 லட்சம் கோடி மற்றும் ஜனவரியில் ரூ.1.11 கோடி வருமானம் வந்துள்ளது.   சென்ற மாதம் ரூ.1.05 லட்சம் கோடி ஆனதால் தொடர்ந்து நான்கு மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1லட்சம் கோடியை தாண்டி உள்ளது.