ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.93,960 கோடி

டில்லி:

ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் மூலம் 93,960 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

ஜிஎஸ்டி மூலம் மாதந்தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கையும் தாண்டி சில மாதங்களில் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 93 ஆயிரத்து 960 கோடியாக உள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறை இன்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி. 15 ஆயிரத்து 303 கோடி ரூபாயும், மாநிலங்களின் மூலம் ஜி.எஸ்.டி. 21 ஆயிரத்து 154 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி உள்பட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 49 ஆயிரத்து 876 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இறக்குமதிக்கான செஸ் வரி 849 கோடி ரூபாய் உள்பட 7 ஆயிரத்து 628 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.