தகவல் அறியும் உரிமை சட்ட பதில் அறிக்கைக்கு ஜிஎஸ்டி வசூல்

போபால்:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மனு அளித்தவருக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அஜய் துபே என்பவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை முகமை அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு ஆன செலவினங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அவருக்கு 18 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு ஒரு பக்கத்துக்கான ஜெராக்ஸ் கட்டணமாக 2 ரூபாய் என்ற விகிதத்தில் 18 பக்கங்களுக்கு 36 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது.

இந்த 36 ரூபாய்க்கு மத்திய, மாநில அரசுகளுக்கு தலா 3.50 ரூபாய் ஜிஎஸ்டி என மொத்தம் 43 ரூபாய் செலுத்த வேண்டும் என தகவல் அறியும் உரிமை ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில்ய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது நலனுக்கான தகவல் அறியும் சட்டம் மூலம் சில விபரங்களை பெற ஜி.எஸ்.டி.விதிக்கப்படுவது அநீதி என அஜய் துபே குறிப்பிட்டுள்ளார்.