புதுடெல்லி:

கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5% குறைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல்வேறு துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிறு தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, வரி குறைப்புப் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் தலைமையிலான  ஜிஎஸ்டி கவுன்சில்,கடைசி கூட்டத்தில் இது குறித்து விவாதித்தது.

கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை மறு ஆய்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் வரியை 5% குறைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.