புதுடெல்லி: வரும் 27ம் தேதி(வியாழக்கிழமை) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று நிதியமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக கூறியதாவது, “கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பித்த ஊரடங்கால், மத்திய & மாநில அரசுகளின் வரி வருவாய் பெரியளவில் குறைந்துள்ளது.

மேலும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்காக, மாநில அரசுகளுக்கு வழங்கும் இழப்பீட்டிற்கான நிதியத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், ஆகஸ்ட் 27ம் தேதி ‘வீடியோ கான்பரன்ஸிங்’ முறையில் நடைபெற உள்ளது” என்று கூறினார் அந்த அதிகாரி.