ஜி. எஸ். டி : 66 பொருள்களுக்கு அதிரடி வரி குறைப்பு

டில்லி

ன்று நடந்த ஜி எஸ் டி கவுன்சிலின் விவாதத்துக்கு பின் அருண் ஜேட்லி 66 பொருள்களுக்கு ஜி எஸ் டி வரி குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இன்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் 133 பொருட்களின் ஜி எஸ் டி அதிகமாக இருப்பதாக பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்ததின் மேல் விவாதம் நடைபெற்றது.

இவைகளை ஆய்ந்த கவுன்சில் 66 பொருட்களின் ஜி எஸ்டி வரி விதிப்பை அதிரடியாக குறைத்துள்ளது

இந்த வரி குறைக்கப் பட்ட பொருட்களில், கம்பியூட்டர் ப்ரிண்டர், இன்சுலின், ஊதுபத்தி, முந்திரிப்பருப்பு, பிளாஸ்டிக் தார்ப்பாலின், நோட்டுப் புத்தகங்கள், குழந்தைகளின் வண்ண பயிற்சி புத்தகங்கள், டிராக்டர் உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவையும் அடங்கும்.

ரூ 100க்கு குறைவான மதிப்புள்ள பள்ளிப்பைகளுக்கு 28%லிருந்து 18%ஆக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது

பொழுதுபோக்கு வரிகளில் இரு விதமான வரிகளாக மாற்றப்பட்டுள்ளது.

திரைப்பட டிக்கட் விலை ரூ 100க்கு மேலிருந்தால் 28%, குறைவாக இருந்தால் 18% எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் மாநிலங்களில் 30% வரை வரி விதிக்கப்பட்டிருந்தது.

சில மாநிலங்களில், மாநில மொழி திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது விலக்கு அளிக்க இயலாது

ஆனால் மாநில அரசுகள் ஜிஎஸ்டி யில் தங்களின் பங்கை திரைப்படங்களுக்கு விலக்கு அளிக்கலாம்.

நாப்கின்கள் வரி விதிப்பில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.