டில்லி,

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக  தமிழகம் உட்பட 22 மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் செயல்பட்டு வந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டது.

கடந்த 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாநில எல்லைகளில் செயல்பட்டு வந்த வரி வசூலிக்கும்  சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் 22 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள வரி வசூல் செய்யும்  சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன.

இதற்கு முன் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல அந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வரி செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டிருப்பதால்,  வாகனங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எளிதில் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது.