வீடுகளுக்கான ஜி எஸ் டி விகிதம் குறைப்பு :  அருண் ஜெட்லி அறிவிப்பு

டில்லி

ட்டுமானம் செய்யப்பட்டு வரும் வீடுகளுக்கான ஜி எஸ் டி 5% ஆகவும் தயாராக உள்ள வீடுகளுக்கான ஜி எஸ் டி1% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

விடுகளுக்கான ஜி எஸ் டி குறைக்கபட வேண்டும் என பல நாட்களாக கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.   இது குறித்து  குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் தலைமையிலான அனைத்து மாநில வீட்டு வசதி அமைச்சர்கள் குழு ஜி எஸ் டி கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,  “33 ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவின்படி வீடு கட்டும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு இணங்க தயாராக உள்ள வீடுகளுக்கான ஜி எஸ் டி 8% லிருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 8% ஆக குறைக்கப் பட்டுள்ளது.   இது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொள்ளவில்லை.   இந்நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   அத்துடன் இந்த அறிவிப்பின் மூலம் கட்டுமானத்தில் உள்ள வீடுகளை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் என அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி