ஜிஎஸ்டி முறைகேடு…செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு சீல்

கோவை:

ஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்ட செட்டாப் பாக்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே முதலிபாளையத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திற்கு செட்டாப் பாக்ஸ் தயாரித்து வழங்கும் நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனம் ரூ.50 கோடி வரையில் ஜி.எஸ்.டி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இன்று தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.