ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் காஷ்மீருக்கு அளித்து வரும் சிறப்பு சட்டமான 370வது பிரிவு செயலிழந்துவிடும் என்றும், இது ஆர்எஸ்எஸ்சின் சிந்தாந்தம் என்றும்  தேசிய மாநாட்டு கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுவரை ஜிஎஸ்டி சட்டம் ஸ்ரீநகர் சட்டமன்றத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி குறித்து இரண்டு விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து மசோதா நிறைவேறியது.

இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் கூறியதாவது,

இந்த சட்ட திருத்தத்தின் காரணமாக, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு  சட்டப்பிரிவு 370 செயலற்றதாகி விடும் என்று அதிர்ச்சி தெரிவித்தார்.

மத்தியஅரசு தற்போது அமல்படுத்தியிருப்பது, ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் என்றும், இதன் அடுத்த இலக்கு சட்டப்பிரிவு 370 என்றும் கூறி உள்ளார்.

மற்றொரு உறுப்பினரான  தேவிந்தர் சிங் ராணா பேசும்போது,  போதுமான பாதுகாக்கும் பிரிவுகள் ஏதுமின்றி சட்டப்பிரிவு 101 நேரடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார்.

நிதியமைச்சர் மீண்டும் மீண்டும் பேரவையில் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றே இப்பிரிவு ஏற்கப்படும் என்றார். ஆனால் இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு இந்திய அரசமைப்புப் பிரிவு 101 அதன் மூல வடிவத்திலேயே அமல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

”இது காஷ்மீர் சட்டப்பேரவை வரலாற்றின் இருண்ட நேரம்” என்ற ராணா. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்க தேசிய மாநாடு கட்சி கூடி பேசும் என்று கூறி உள்ளார்.