ஜிஎஸ்டி ஒரு சுயநல வரி திட்டம்!! மம்தா

கொல்கத்தா:

ஜி.எஸ்.டி. என்பது பெரிய சுயநல வரி திட்டம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரொபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தனது மற்றொரு பதிவில்,‘‘ ஜி.எஸ்.டி. என்பது சுயநல வரி. இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. தொழில் பாதிக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

You may have missed