21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் – ஜிஎஸ்டி குறித்து சுப்பிரமணியன் சுவாமி

ஹைதராபாத்:  சமீபத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி யை “21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம்“ என வர்ணித்த பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, 2030க்குள் நாடு வல்லரசாக மாற வேண்டுமானால் ஆண்டுக்கு 10% ஆக வளர வேண்டும் என்று கூறினார்.

அவர் மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களுக்காக நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

ஹைதராபாத்தில் பிரக்ய பாரதி ஏற்பாடு செய்திருந்த “இந்தியா-2030க்குள் ஒரு பொருளாதார வல்லரசு“ என்ற நிகழ்ச்சியில் பேசிய சுவாமி, அவ்வப்போது நாடு 8% வளர்ச்சியை எட்டியிருந்தாலும், காங்கிரஸ் தலைவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை“. என்று கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு வல்லரசாக மாற வேண்டுமானால் ஆண்டுக்கு 10% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று சுவாமி கருத்து தெரிவித்தார்.  அத்துடன் இந்த ஜிஎஸ்டி மிகவும் சிக்கலாக உள்ளது என்றும் அந்தப் படிவத்தை நிரப்புவதற்கே மக்கள் அவதிப்படுவதாகக் கூறினார்.

இந்தியா தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், தேவைக்குறைவாகும். ஏனெனில், மக்களிடம் செலவு செய்வதற்குப் பணம் இல்லை என்றும் இதனால் பொருளாதார சுழற்சிக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சரியான நீர்ப்பாசன வசதி இல்லாததால், ஒரு ஏக்கருக்கான விவசாய உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாக இருப்பதாகவும் சுவாமி தெரிவித்தார். மேலும், ஊழலை ஒழிக்கவும், பொருளாதார வளர்ச்சியை எட்டவும் வருமான வரியினை நீக்கவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

 

 

1 thought on “21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் – ஜிஎஸ்டி குறித்து சுப்பிரமணியன் சுவாமி

  1. * மோடி சார் யாருடைய ஆலோசனையையும் கேட்கமாட்டார்  பொருளாதர வல்லுநர்கள் எவ்வளவோ பேர் என்ன சொன்னாலும் அதையெல்லாம் அவர் கேட்கவில்லை , இனிமேலும் கேட்கமாட்டார் , அவருடைய குறிக்கோள்கள் மர்மமானவை , அதனால் வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர விருப்பமில்லை ,  சாமி சார் அவரை நேரில் சந்தித்து பேசுவது நல்லது , டெல்லியில் J N U பல்கலை கழக மாணவர்கள் விடுதி , மற்றும் கல்வி கட்டண உயர்வை குறைக்கும்படி 3 வாரமாக போராடினார்கள் , கருணை உள்ளம் கொண்ட பிரதமாராயிருந்தால் உடனடியாயாக அதில் தலையிட்டு அவர்களுக்கு வேண்டிய வைகளை செய்திருப்பாரே , பாவம் படிப்புக்காக ஏழை எளிய மாணவர்கள் படும் பாட்டை நாடே கவனித்து கொண்டிருந்தது , இப்படிப்பட்டவரிடம் யார் என்ன சொல்லமுடியும் ? கடவுள்தான் அவரிடம் பேச வேண்டும் , அப்போதுதான் gst வரி விதிப்பால் பொருளாதார வீழ்ச்சியை கண்டு கொள்வார் , சிறு குறு தொழில் செய்கிறவர்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர் , , பொதுவாக எந்த வரியோ ? அல்லது சட்டமோ , திட்டமோ  என்ன கொண்டுவந்தாலும் வெறித்தன மான தாக்குதலே இவர்களிடம் உள்ளது , சரி வரியை எல்லாவிதத்திலும் வசூலித்தும் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்ய முடிந்தது ? பெரும் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து வருவதையே காட்டுகிறது , மக்களுக்காக விட்டு கொடுத்தால் வீழ்ச்சியை கட்டுப்படுத்தலாம் , G S T வரியை 7 % க்கு கொண்டு வந்தால் கூட நல்ல மாற்றம் ஏற்படும் , எந்த ஒரு அரசாக இருந்தாலும் விவசாய வளர்ச்சியையோ சிறு குறு , நடுத்தர தொழில் வளர்ச்சியையோ , உற்பத்தியையோ ஊக்கப்படுத்தாமல் வரிமேல் வரியை மட்டும் வசூலித்தால் ,,,,,,,,,,,,,  என்னவாகும் ?

        

     

        

Comments are closed.