புதுடெல்லி: இந்த நிதியாண்டில், பெரிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடானது இருமடங்காக அதிகரித்து, ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரையில் உயரும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத், மராட்டியம், பஞ்சாப், ஹரியானா, மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு இருமடங்காக உயரும்.

இந்த மாநிலங்களில் பட்ஜெட்டில் கணிக்கப்பட்டதைவிட வரிப்பகிர்வு குறைவாக இருக்கும். அதாவது, ஜிஎஸ்டி சட்டம் 2017ன்படி, பாதுகாக்கப்பட்ட வருவாயின் அளவைவிட கணிசமான அளவு குறைவாக இருக்கும்.

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.