ஜிஎஸ்டி வசூல் அமோகம்: 8 மாதங்களில் ரூ.7.41 லட்சம் கோடியை குவித்த நிதி அமைச்சகம்

டில்லி :

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதன் காரணமாக ரூ.7.41 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கடந்த  2017-18 ம் நிதியாண்டில் 2017ம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இடைப்பட்ட 8 மாதங் களில் மட்டும்  ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது மாதம் ஒன்றுக்கு சராரியாக Rs 89,885 கோடியாகும்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளி யிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.7.19 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2017 ம் ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலையும் சேர்த்து, 2017-18 ம் ஆண்டில் மொத்தம் ரூ.7.41 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.

இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.1.19 லட்சம் கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.1.72 லட்சம் கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.3.66 லட்சம் கோடியும், செஸ் மூலம் ரூ.62,021 கோடியும் வசூலாகி உள்ளது.

ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.89,885 கோடி வசூலாகி உள்ளது. இந்த 8 மாதங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை ரூ.41,147 கோடியாகும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.